சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. காஞ்சிபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டும், சிறந்த கருத்தாளர்களை கொண்டும், நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவை குறித்தும், இவ்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட அளவில் விழிப்புணர்வு எற்படுத்திடும் வகையில், ஒருநாள் பயிற்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

இதற்கு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த, கருத்தரங்கில், 50 சுயஉதவி குழு பிரதிநிதிகள் மற்றும் 50 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் போன்ற பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் குறித்த செயல்பாடுகளும், அரசின் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தெளிவும் இக்கருத்தரங்கின் கலந்து கொண்டவர்களிடேயே ஏற்பட்டு, இதன் மூலம் பொதுமக்களை சென்றடையும் என்பது இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். தொடர்ந்து விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை கலெக்டர் வெளியிட்டார்.

The post சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: