காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ59.16 லட்சம்

காஞ்சிபுரம்: சக்தி தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில், நவராத்திரி உற்சவம் நடைபெற்று முடிந்தநிலையில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்துவிட்டு சென்ற காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக 59 லட்சத்து 16 ஆயிரத்து 361 ரூபாயும், 163 கிராம் தங்கமும், 432 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் வசூலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டது.

The post காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ59.16 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: