குன்னூர் அருகே அங்கன்வாடி மையம் மீது விழும் அபாயம்; சாய்ந்த நிலையில் இரும்பு மின்கம்பம்: அகற்ற கிராம மக்கள் கோரிக்கை


குன்னூர்: குன்னூர் அருகே சாய்ந்த சாயந்த நிலையில் துருப்பிடித்து அங்கன்வாடி மையம் மீது விழும் நிலையில் உள்ள இரும்பு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள யானைபள்ளம் என்னும் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கன்வாடி மையத்துக்கு அருகே உள்ள இரும்பு மின்கம்பம் சாய்ந்த நிலையில் துருப்பிடித்து, நடுவில் ஓட்டை விழுந்துள்ளது. கம்பம் எந்த் நேரத்திலும் அங்கன்வாடி மையம் மீது உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இரும்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் அருகே அங்கன்வாடி மையம் மீது விழும் அபாயம்; சாய்ந்த நிலையில் இரும்பு மின்கம்பம்: அகற்ற கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: