போலீஸ்காரரின் கையை கடித்த தவெக தொண்டர்

 

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகே, மதுக்கடையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரை மூடக்கோரி, தவெக சார்பில் நேற்று, பாலக்கோடு- தர்மபுரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, திடீரென தவெகவினர் மதுபான கடை அருகே சுற்றிலும் போடப்பட்டிருந்த தகர தடுப்புகளை எட்டி உதைத்து, உடைக்க முயன்றனர்.

இதை கண்ட 20க்கும் மேற்பட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த தவெகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் கையை பிடித்து நறுக் என கடித்தார். இதனால், வலி தாங்க முடியாமல் போலீஸ்காரர் அலறியதை கண்ட சக போலீசார், அந்த வாலிபரை அப்புறப்படுத்தி, போலீஸ்காரரை காப்பாற்றினர்.

 

Related Stories: