திருச்சி ஏர்போர்ட்டில் 5,000 ஆமைகள் பறிமுதல்

 

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று அதிகாலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவை சேர்ந்த 2 பெண் பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில், 12 டப்பாக்களில் 5 ஆயிரத்து 61 அரியவகை ஆமை குஞ்சுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட இன (ரெட் ஸ்லைடர் இயர்) ஆமைக்குஞ்சுகள் என தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பெண்கள் மீது, இந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related Stories: