21 நகரமன்ற கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நகராட்சியின் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய பணிகள் தேர்வு தொடர்பாக உறுப்பினர்கள் நகரமன்ற பார்வைக்கு கொண்டு வந்தனர். குறிப்பாக, பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தவும், குடிநீர், சாலை, மின் விளக்கு, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* புதிய ஆணையர் பொறுப்பு ஏற்பு
திருத்தணி நகராட்சி புதிய ஆணையராக பு.ரா.பாலசுப்பிரமணியம் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகரமன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி, நகரமன்ற துணைத் தலைவர் ஆ.சாமிராஜ், நகரமன்ற கவுன்சிலர்கள் ஷியாம் சுந்தர், அசோக்குமார், மேஸ்திரி நாகராஜ், விஜயசத்தியா ரமேஷ் உட்பட நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருத்தணி நகரமன்ற கூட்டம் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.