கோடை விடுமுறையில் வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம், ‘வீரன்’. ஏற்கனவே இந்நிறுவனத்துக்காக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து ஓடிடியில் வெளியான படம், ‘அன்பறிவு’. நகைச்சுவை, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் ஆகிய கலவையுடன் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள ‘வீரன்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது. இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், ஜி.சரவன், சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி, அதிரா ராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் நடித்துள்ளனர். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார்.

The post கோடை விடுமுறையில் வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: