சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவகங்கை, மே 30: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது குரூப் 1 தேர்வு மூலம் 90 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டி தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: