திருவாரூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றகோரி ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், டிச.9: திருவாரூர் அருகே அம்மையப்பனில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்திடகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவாரூர் அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையப்பன் என்ற இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் பள்ளி, மாணவி மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.  அதே போல் அருகிலேயே தனியார் கல்லூரிகளும் இருப்பதால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் இடையூறாக உள்ளது.

Related Stories: