திருவாரூர், டிச.9: திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் மற்றும் ஈபி காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையினை உடனடியாக சீரமைக்க கோரி அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் ஒன்று சேர்ந்து நேற்று சேந்தமங்கலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
