வீடு புகுந்து நகை பணம் திருட்டு

 

திருச்சி, டிச.9: திருச்சியில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடுகின்றனர். திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் மரகதம்(50). இவர், ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். மேலும், ரவிச்சந்திரன் வீட்டின் மேல் அறையில் தங்கியுள்ளார். கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டை விட்டு, அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, வீட்டில் 27 கிராம் நகை, ரூ.15,000 பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: