தஞ்சாவூர், டிச. 9: தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 3 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி என மொத்தம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 3 சிறு விளையாட்டு அரங்குகளுக்கான கட்டுமான பணியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டுமான பணிகளுக்கு துணை முதலமைச்சர் முன்னிலையில் நேற்று அடிக்கல் நாட்டினார்.
