வாலீஸ்வரர் திருக்கோயிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம்

 

பெரம்பலூர்,டிச.9: புகழ்பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை யொட்டி 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் தரிசனம். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரத்தில், இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கிபி 9 ஆம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட, வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று (8ம்தேதி) கார்த்திகை மாதத்தின் 4-வது சோம வாரத்தை (திங்கள் கிழமை) முன்னிட்டு, 108 சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. சோமவார யாக பூஜையைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் வாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தப்பட்டது.

Related Stories: