விராலிமலை,டிச.9: விராலிமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர் 3 பேரை விராலிமலை போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கொண்டம நாயக்கன்பட்டி தொழிற்சாலை பகுதியில் வடமாநித்தவர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக விராலிமலை காவல் ஆய்வாளர் லதாவுக்கு கிடைத்த தகவலையடுத்து துணை ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் அப்பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
