ஒரத்தநாடு, டிச. 9: ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பிலுள்ள தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை ெநடுஞ்சாலை மற்றும் ஒரத்தநாடு மாவட்ட இதர சாலை இரண்டும் ஒய் வடிவில் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இச்சாலை சந்திப்பில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. சாலை பாதுகாப்புக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இச்சாலை சந்திப்பினை மேம்படுத்தி முடிவு ெசய்யப்பட்டது.
