கொள்ளிடம், டிச.9: கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டக்கலை பயிர்கள் மழையால் பெரிதும் சேதமைடந்துள்ளதால் கூடுதலாக மானியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெண்டை, கத்திரி, மிளகாய் கொத்தவரை உள்ளிட்ட தோட்ட பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
