பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதிஅருகே உள்ள நெய்நந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றொருதல் குழு சார்பில் கார்த்திகை மாத வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9மணி முதல் மாலை 4.30 மணி வரை திருவாசகம் பாடப்பட்டது.
