நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

நாகப்பட்டினம், டிச.9: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 279 மனுக்கள் பெறப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 279 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலிக்கருவி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

Related Stories: