வேதாரண்யம், டிச.9: வேதாரண்யம் தாலுகாவில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடியை பழைய முறைப்படி கணக்கெடுப்பு பணியை வேளாண்மை துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக கடைமடை விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தலைவர் கமல்ராம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா சாகுபடி முற்றிலும் நேரில் மூழ்கி அழுக துவங்கி உள்ளது. இதனை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு முறையால் உண்மையான பயிர்பாதிப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே டிஜிட்டல் செயலி வழியாக பாதிப்பை கணக்கிடும் முறையை கைவிட வேண்டும்.
