அரியலூர், டிச.9: அரியலூர் அண்ணாசிலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த சட்டத்திருத்த 4 தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். மின் திருத்த மசோதவை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயாக்குவதை தடுத்த நிறுத்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
