தை மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு நாளை(ஜன.23) முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி!

மதுரை: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை(ஜன.23) முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மாத தடைக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை(ஜன.23) முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு துரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் எனவும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தை மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு நாளை(ஜன.23) முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: