மேலும், இந்தியாவின் அனைத்து சீர்மிகு நகரங்களுக்கு இடையேயான போட்டியில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தென் மண்டல அளவிலான நிதி மற்றும் செயல்திறனில் முதல் இடத்திற்கான விருது மற்றும் மாதிரி சாலைகள், ஏரிகள் புனரமைப்பிற்காக இந்திய அளவில் முதல் இடத்திற்கான விருது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மறு சீரமைப்பு மற்றும் நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடத்திற்கான விருது, மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான விருதினை கடந்த 27ம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார். மேலும், சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதுகளை மாநகராட்சியின் மேயர்கள் மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் 2-வது சிறந்த மாநில விருது கோவை, தூத்துக்குடி, தஞ்சாவூருக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது: அரசு தகவல் appeared first on Dinakaran.