சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை(ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்திக்கு தணிக்கை சான்று சிக்கல்..!!

சென்னை: சுதா கொங்குராய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10ம் தேதி முன்கூட்டியே திரைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை போலவே பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை குழு தற்போது வரை தணிக்கை சான்று வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்காக தொடர்ந்து 2 முறை பராசக்தி படத்தின் காட்சிகளை நீக்க செய்வதற்கும், வசனங்களை மியூட் செய்வது என படக்குழுவினர் அனைத்தையும் செய்துள்ள நிலையில் தற்போது வரை பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தணிக்கை குழு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் அல்லது மாலைக்குள்ளாக இந்த சான்றிதழ் தொடர்பான முழு விவரங்களும் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவிடம் தொடர்ந்து முறையிட்டு வருவதாகவும் தணிக்கை குழு இன்று மாலைக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் படத்தயாரிப்பு நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தகவல் தெரிவித்தது. பராசக்தி திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கை குழு தணிக்கை சான்றிதழை முழுமையாக தரவில்லை. தணிக்கை குழு ஏற்கனவே UA சான்றிதழை வழங்க இருப்பதாக வாய்மொழியாக உத்தரவை தெரிவித்துள்ள நிலையில் சான்றிதழை படக்குழுவினரிடம் வழங்காமல் தணிக்கை குழு காலம் தாழ்த்தி வருகிறது.

Related Stories: