சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் ரெய்டு

ராய்பூர்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராய்ப்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது என தெரியவில்லை.

மேலும், முதல்வரின் சிறப்பு அதிகாரி வீடு மற்றும் துர்க் நகரில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது குறித்து பூபேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், இந்த சோதனைகளை நடத்தி எனது பிறந்தநாளன்று மதிக்க முடியாத பரிசு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

The post சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: