ஏழுமலையான் கோயிலில் அமித்ஷா தரிசனம்: மனைவியுடன் திருப்பதி வந்தார்

திருமலை: திருப்பதி ஏழுலையான் கோயிலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மனைவியுடன் வந்து நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மனைவியுடன் தமிழ்நாட்டில் உள்ள திருமயம் கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு திருப்பதிக்கு சென்றார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து திருமலைக்கு சென்ற அவர், அங்கு தங்கி நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்கள் மற்றும் வஸ்திரங்களை வழங்கினர். இதையடுத்து அமித்ஷா, கார் மூலம் ரேணிகுண்டா புறப்பட்டார். அமித்ஷா வருகையொட்டி திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா வரையிலான பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

The post ஏழுமலையான் கோயிலில் அமித்ஷா தரிசனம்: மனைவியுடன் திருப்பதி வந்தார் appeared first on Dinakaran.

Related Stories: