அரசு நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்களை கட்ட அனுமதிக்க கூடாது: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு மத வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தோட்டக்கலைத் துறை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசு நிலத்தில் எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் தன்னுடைய உத்தரவில் மேலும் கூறியது: கடவுள் தூணிலும், துரும்பிலும் இருக்கிறார். எனவே அரசு நிலத்தில் மத வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அரசு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை ஒரு வருடத்திற்குள் இடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post அரசு நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்களை கட்ட அனுமதிக்க கூடாது: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: