காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பாகிஸ்தானில் சுட்டு கொலை

லாகூர்: காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பஞ்சாபின் தரண் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்வார் கிராமத்தை சேர்ந்த இவர், பாகிஸ்தானுக்கு தப்பிஓடி அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்ற செயல்களை செய்து வந்தார். நேற்று காலை லாகூரின் டோகர் நியாஸ் பைக் அருகே தனது உதவியாளர்களுடன் பரம்ஜித் சிங் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பரம்ஜித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பாகிஸ்தானில் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: