அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி உறுதி மத்திய அரசின் நிதி பிரயாஸ் திட்டம் இளைஞர்கள் பயன்பெற சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகம் அழைப்பு

தஞ்சை, டிச.16: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் “நிதி பிரயாஸ்” திட்டத்தின் கீழ் பயனடைய தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள புதுமை படைப்பில் ஆர்வமுள்ளவர்கள் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகத்தைஅணுகலாம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஒரு மையமாக சாஸ்த்ரா விளங்குகிறது. உங்களிடம் சிறந்த யோசனை உள்ளதா? ஏதோ ஒரு தயாரிப்பின் முன் உள்ளதா? அதற்கான நிதி உதவி தேவைப்பட்டால் நீங்கள் சாஸ்த்ராவை அணுகலாம்.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையினரால் உருவாக்கப்பட்ட “நிதி பிரயாஸ்” திட்டம் புதுமை படைப்பில் திறன் உள்ளவர்களை ஊக்குவித்து அவர்களதுதொழில் நுட்பம் சார்ந்த யோசனைகளைக் கொண்டு தொடக்கநிலை நிறுவனங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆர்வம் உள்ள இளைஞர்களின் யோசனைகளை தயாரிப்பு முன் வடிவமாக மாற்ற நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை துவக்கி வைத்த சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர் வைத்தியசுப்பிரமணியம் மற்றும் 131 அமைப்பின் இயக்குனர் ஆகியோர் இளைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் கேட்டுக்கொண்டனர். இதில் தெரிவு செய்யப்படுவோர் அதிகபட்சமாக ரூ.10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) வரை நிதி உதவி பெறலாம். மேலும் சாஸ்த்ரா டிபிஐன் உள்ள 3 டி பிரிண்டிங், ஐஓடி, விஆர் மற்றும் டிரோன் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் சாஸ்த்ராவின் தொழில்முனைவோருக்கான இன்குபேசன் மையத்தின் நவீன கம்ப்யூட்டர் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். உற்பத்தி, விவசாயம், சுகாதாரம், ஏஐ/எம்எல், ஆற்றல், நீர், ஐஓடி ஆகிய இத்திட்டத்தின் முக்கிய துறைகளில் புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கூடுதல் தகவல் பெறவும் மற்றும் விண்ணப்பிக்க prayas. sastratbi.in என்ற இணையதள முகவரியை அணுகலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.12.2021. ஆகும்.

Related Stories: