திருவாரூர் பாண்டிசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

முத்துப்பேட்டை, மே 25: முத்துப்பேட்டை அடுத்த பாண்டி சத்திரம் கிழக்கு கடற்கரை சாலை கடைதெரு அருகே பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்கட்டிடத்திற்கு வந்து தான் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுபகுதி கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் மார்க்கம் செல்லவும் மறுபுறம் முத்துப்பேட்டை அதனை தொடர்ந்து தூத்துக்குடி போன்ற பல்வேறு பகுதி வெளியூர் பயணங்களை மேற்க்கொண்டு வருகின்றனர்.இதேபோல இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்கட்டிடம் பயனடைந்து வருகிறது போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயணிகள் நிழற்கட்டிடத்தின் மேல் சேதமாகியுள்ளன சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது.

கட்டிட சுவர்களும் சேதமாகி உருக்குலைந்து உள்ளது. அதேபோல் கட்டிடத்தின் உள்ளே இருக்கைகள் சேதமாகியும் உள் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதேபோல் கட்டிடத்தின் பின்பக்க சுவர் சேதமாகியுள்ளன. இதனால் இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து பழுதடைந்த இந்த  பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திருவாரூர் பாண்டிசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: