கட்சியை கலைக்க தயாராக இருங்கள்

திருச்சி, மே 25: திருச்சி ரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று இரவு வருகை தந்திருந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்டமாக நடந்த தேர்தலில் இதுவரை நடந்து முடிந்த தொகுதிகளில் 310 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். . அதேபோன்று தமிழகத்திலும் பாஜ கூட்டணிக்கு சிறப்பான திருப்பு முனை ஏற்படும். தமிழகத்திலும் பாஜ அமோக வெற்றி பெற உள்ளது. வரும் 4ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜ அதிகமான வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்துவிட்டு செல்வேன் என கூறியுள்ளார். எனவே விரைவில் அவரது கட்சி கலைக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

The post கட்சியை கலைக்க தயாராக இருங்கள் appeared first on Dinakaran.

Related Stories: