மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ₹3.71லட்சம் உண்டியல் காணிக்கை

விராலிமலை, மே 25: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் தங்கம், வெள்ளி காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் நேற்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்கள் செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் ஆய்வாளர் யசோதா,செயல் அலுவலர் கவிதா முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 258-ம், 7.600 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி உள்ளிட்ட ரொக்கம் பொருட்களை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் இசை வேளாளர் சங்க அறக்கட்டளை பொது செயலாளர் பூபாலன், கோவில் மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஊழியர் அருள் முருகன் மற்றும் விளக்கு பூஜை மகளிர் குழுவினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ₹3.71லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: