கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி

கறம்பக்குடி, மே 25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் வேளாண் சம்மந்தமான பல்வேறு பயிற்சி களில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படை யில் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயன்பெறும் வகையில் வேளாண் சம்மந்தமான கண்காட்சி யை நடத்தினர். இந்த கண்காட்சியில் வேளாண் சார்ந்த பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருத்தன.

மேலும் விவசாயிகளுக்கு மூல பொருளாக விளங்குவது விதையே என்றும் அதான் அடிப்படை யில் நெல் கடலை உளுந்து வெண்டை மிளகாய் கத்திரி போன்ற பயிர்களின் நாட்டு பயிர் மற்றும் ஹைப்ரிட் பயிர்கள் ரகங்கள் வைக்கப்பட்டிருத்தன. மேலும் குறிப்பாக நெல் ரகங்களில் கருப்பு கவுனி, தூய மல்லி, மாப்பிளை சம்பா, அறுபதாம் குருவை போன்ற நாட்டு விதை ரகங்கள் வைக்க பட்டிருத்தன.

மேலும் விதை நேர்த்திக்கு தேவைப்படும் உயிர் உரங்களில் ட்ரைக்கோ டர்மா, அசோஸ் பயிரில்லம், சூடோ மோனாஸ் போன்றவைகளும் வைக்கப்பட்டிருத்தன மேலும் குறிப்பாக விவசாயத்திற்கு விவசாயிகளால் அதிகம் பயன் படுத்த படும் உரங்களில் யூரியா, சல்பேட், பொட்டாஸ் போன்றவை களும் வைக்க பட்டிருந்த மேலும் கண்காட்சி யில் காளான் வளர்ப்பு மாதிரி களும் வைக்க பட்டிருத்தன இந்த குடுமியான் மாலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகளால் மழையூரில் நடத்த பட்ட கண்காட்சி யில் விவசாயிகள் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்காட்சி யை பார்த்து ரசித்தனர் மழையூர் வட்டார விவசாயிகளுக்கு அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

 

The post கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: