கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா

கும்பகோணம், மே 25: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா நடைபெற்றது. இந்த கிளையானது எண்.63, பெரிய கடைத்தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில், கூத்தாநல்லூர் என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் புதிய பொலிவுடன் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிளை இடமாற்ற நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் அவராத்தர் ஃபாத்திமா பஷீரா கிளையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கூத்தாநல்லூர் முஸ்லிம் லீக் பேரவை சங்க செயலாளர் சகாபுதீன் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிதியின் துணைத்தலைவரும், மயிலாடுதுறை எம்.பியுமான ராமலிங்கம், நிதியின் மேலாண் இயக்குநர் பி.ஆர்.பி.வேலப்பன், தலைமை பொது மேலாளர் சுபாஷ், பொது மேலாளர் வெங்கடேசன், துணை பொது மேலாளர் கருணாநிதி, உதவி பொது மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் ரமேஷ், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா appeared first on Dinakaran.

Related Stories: