மழையால் துளிர் விட்ட மரங்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3வது வாரத்தில் கடற்கரை தூய்மை பணி

திருத்துறைப்பூண்டி, மே 25: திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் மூன்றாவது வாரத்தில் கடற்கரை தூய்மை பணி நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்ட தேசியபசுமை படை , திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், பாலம் சேவை நிறுவனம் இணைந்து திருவாரூர் மாவட்டத்தில் கற்பகநாதர்குளம், முனங்காடு, தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, முத்துப்பேட்டை வரையிலான கடற்கரை பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மரத்துண்டுகள் வலைகள் தூய்மை செய்யும் பணி நடை பெறவுள்ளது, இதில் அனைத்து சேவை அமைப்புகள், உள்ளூர் தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதற்கான ஆலோசனைக்கூட்டம் இம்மாத கடைசியில் நடைப்பெறவுள்ளது என்று ஒருங்கிணைப்பாளர் பாலம்செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

The post மழையால் துளிர் விட்ட மரங்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3வது வாரத்தில் கடற்கரை தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: