திருவாரூர் அருகே அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க கொடி ஏற்றுவதில் தவெக நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு

 

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிற்சங்க கொடி ஏற்றுவதில் தவெக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு தவெக தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.பி.பாரதி தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதை அறிந்த அக்கட்சியின் நகர செயலாளர் பாரதி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள் பணிமனைக்கு திரண்டு வந்து எங்களிடம் தெரிவிக்காமல் எப்படி கொடியேற்றினீர்கள் என மாவட்ட செயலாளரிடம் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மோதல் உருவானது. இந்த மோதல் சம்பவத்தால் அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தவெக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: