சின்னத்திரையில் சீனியர்-ஜூனியர் மோதல் வெடித்தது; ஷூட்டிங்கில் வில்லி நடிகையை அடித்து உதைத்த சக நடிகை

 

* ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை
* பஞ்சாயத்து செய்த இயக்குநர்

சென்னை: தண்டலம் பகுதியில் நடந்த சின்னத்திரை ஷூட்டிங்கில் வில்லி நடிகை சசிலயாவை சக சீனியர் நடிகையான ஆர்த்தி ராம், தனக்கு சோபாவில் அமர இடம் கொடுக்கவில்லை என்று கூறி தாக்கினார். இந்த சம்பவம் சின்னத்திரை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த தண்டலம் தாரப்பாக்கம் நாச்சியார் ஹவுசில் சின்னத்திரை ஷூட்டிங் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வார இறுதியில் ஒரு தொடரின் சின்னத்திரை ஷூட்டிங் நடந்தது.

இந்த சீரியலில் சின்னத்திரை மூத்த நடிகையான ஆர்த்தி ராம் மற்றும் டிக் டாக் மூலம் புகழ் பெற்ற நடிகை சசிலயா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சீரியலுக்கு ஏற்றப்படி அவரவர் கதாப்பாத்திரத்தில் சின்னத்திரை நடிகைகள் நடித்து வந்தனர். அடுத்த சீனுக்கு நடிக்க டிக் டாக் நடிகை சசிலயா தயாராகி கொண்டு சக நடிகைகளுடன் ஷூட்டிங் தளத்தில் போடப்பட்ட சோபாவில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அந்த தொடரில் ஆர்த்தி ராம் தனக்கான கதாப்பாத்திரத்தில் நடித்துவிட்டு ஓய்வு எடுக்க ஷூட்டிங் தளத்தில் போடப்பட்ட சோபாவில் அமர வந்தார். அப்போது ஜூனியர் நடிகையான டிக் டாக் நடிகை சசிலயா மற்றும் சக சீரியல் துணை நடிகைகளுடன் அமர்ந்து கிண்டல் அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் சிரித்து கொண்டிருந்தனர். ஷூட்டிங் முடித்து அசதியில் சோபாவில் அமர வந்த ஆர்த்தி ராமுக்கு உட்கார இடம் கொடுக்காமல், வேண்டும் என்று நடிகை சசிலயா அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சசிலயா உடன் அமர்ந்து இருந்த சக துணை நடிகை ஒருவர் சீனியர் நடிகையான ஆர்த்தி ராம் உட்கார இடம் கொடுத்து எழுந்ததும், சசிலயா அவரது கையை பிடித்து உட்கார் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை ஆர்த்தி ராம், ‘சீனியர் நடிகை நான் நின்று கொண்டு இருக்கும் போது, ஜூனியர் நடிகையான சக நடிகையான சசிலயாவை பார்த்து இடம் கொடுக்காமல் அமர்ந்து இருக்கலாமா என்று திட்டியப்படி கையில் ஓங்கி அடித்தார். அப்போது ஆர்த்தி ராம் தனது செல்போனில் அதை வீடியோ எடுத்துக்கொண்டு அவரிடம் சண்டை போட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத சசிலயா ‘நீ யாரு…டி.. என்னை அடிக்க… உனக்கு என்னை அடிக்க யார்… டி ரைட்ஸ் கொடுத்தா… அவள் பெரிய புடிங்கியா……அவள் வந்து என்னை அடிப்பா நான் வந்து பார்த்துக்கொண்டு இருப்பேனா…’ என கூறி கூச்சலிட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் சண்டையை போனில் வீடியோ எடுத்தப்படி மீண்டும் கடுமையான வார்த்தைகள் மூலம் பேசிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் டிக் டாக் நடிகை சசிலயா நடந்த சம்பவத்தை சீரியல் இயக்குநரிடம் நடிகை ஆர்த்தி ராம் குறித்து புகார் அளித்தார். அதன்படி அவர் இருவரிடமும் சமாதானம் செய்ய வந்தார். அப்போதும், இரண்டு நடிகைகளும் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகள் மூலம் பேசி திட்டிக்கொண்டனர். அப்போது ஆர்த்தி ராம் இயக்குநரிடம் ‘சார் நான் அசிங்கமாக ஒரு வார்தை கூட பேசவில்ல சார்…. என்று கூறினார். ஒரு கட்டத்தில் இயக்குநர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

இருந்தாலும், சின்னத்திரை ஷூட்டிங்கில் சக நடிகைகள் போட்ட குடுமிப்பிடி சண்டையை சீரியலில் துணை நடிகைகளாக இருந்த சிலர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். ஷூட்டிங்கில் நடந்த சண்டை குறித்து சீரியல் இயக்குநர் சண்டை போட்ட இரண்டு நடிகைகளிடமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் கேட்டுள்ளார். அது வரை இருவரும் நேரடியாக சந்திக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை ஷூட்டிங்கில் 2 நடிகைகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும் கடுமையான வார்த்தைகளில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிரச்னை மேலும் அதிகரித்து செல்வதால் இரண்டு நடிகைகளும் காவல்துறையை நாட முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: