5 ஆண்டு சட்ட படிப்புகள் விண்ணப்ப பதிவு தொடக்கம்

 

சென்னை: ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ண பதிவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கம் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் 11 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகிறது. அதன்படி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் பி.ஏ.எல்எல்.பி சட்ட படிப்பிற்கும், பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் பி.ஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்), பி.காம்.எல்எல்.பி (ஹானர்ஸ்), பிபிஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்) மற்றும் பிசிஏ.எல்எல்.பி (ஹானர்ஸ்) ஆகிய 5 வருட சட்டப்படிப்புகளுக்கு 2026-27ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது.

விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அனைத்து சட்டப்படிப்பு சேர்க்கைகளுக்கான செயல்பாடுகள் அதாவது விண்ணப்பங்கள் பெறுவது, தகுதிபெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வுகள் நடத்துவது மற்றும் சேர்க்கைக்கான ஆணைகள் வழங்குவது போன்ற அனைத்து செயல்முறைகளும் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.tndalu.ac.in) வாயிலாக மட்டுமே நடைபெறும். சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களும், இணைவுபெற்ற சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 229 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: