பாஜ ஆட்சியில் நீடிக்கும் பதற்றம் மணிப்பூரில் தேவாலய தலைவர்கள் 3 பேர் கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்

இம்பால்: மணிப்பூரில் தேவாலய தலைவர்கள் 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் தற்போது மெய்டீஸ் இனத்தை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியில் நடந்தது போன்றே இப்போதும் வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நீடிக்கின்றன.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தாடோ பாப்டிஸ்ட் அசோசியேஷன் தலைவர்கள் ரெவரென்ட் வி. சிட்லோர், ரெவரென்ட் கைகுலன் மற்றும் பாஸ்டர் பாவோகுலன் ஆகியோர் சுராசந்த்பூரில் நடந்த மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது காட்சிம், கோட்லென் கிராமங்களுக்கிடையே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவாலாய தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: