உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்: புதிய வழக்கு தாக்கல்

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமை அமைப்பால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்ததுள்ளது. இதில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வினாத்தாள் கசிவு புகாரால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பைமா என்ற அமைப்பு தரப்பில் ஒரு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘நடத்தப்பட உள்ள நீட் மறு தேர்வை உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை மறு கட்டமைக்கவும் அதனை சீர்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.மேலும் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் போது அதனை உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்தப்படுவதோடு அதற்கான தனி குழு அமைக்கப்பட்டு அக்குழுவில் இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தடயவியல் நிபுணர் உள்ளிட்டோர் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இதைத்தவிர ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள் மற்றும் யார் வினாத்தாளை கசிய விட்டது, விசாரணையின் தற்போதைய கட்டம் என்ன என்பது குறித்தான விரிவான விசாரணை அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories: