போதைப்பொருள் கடத்தியவர் அஜர்பைஜானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்

புதுடெல்லி: டெல்லியின் சிறப்பு பிரிவு காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் பிரப்தீப் சிங். டெல்லி காவல்துறையின் கோரிக்கையின்பேரில் அஜர்பைஜான் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அந்த நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி கோரிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து பிரப்தீப் சிங் நேற்று இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

Related Stories: