இன்று முதல் அமல்: அமுல், மதர் டெய்ரி பால் விலை உயர்வு

புதுடெல்லி: அமுல் நிறுவனம், அதன் பல்வேறு வகை பால்களின் விலையை இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. 500 மிலி அமுல் தாஸா பால் பாக்கெட்டின் விலை 28 ரூபாயிலிருந்து 29 ரூபாயாக அதிகரிக்கும். அமுல் தாஸா 1 லிட்டர் பாலின் விலை 55 ரூபாயிலிருந்து 57 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் 1 லிட்டர் பாலின் விலை 63 ரூபாயிலிருந்து 66 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எருமைப் பால் 500 மில்லி பாலின் விலை 37 ரூபாயிலிருந்து 39 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமுல் கோல்ட் விலை 34 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்ந்தது. 500 மில்லி அமுல் சக்தி பாலின் விலை 34 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயரும்.  இதே போல் மதர் டெய்ரி நிறுவனமும் இன்று முதல் பால்விலையை உயர்த்தி உள்ளது. எருமைப் பாலின் (1 லிட்டர்) விலை ரூ.75லிருந்து ரூ.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல் கிரீம் பாலின் (1 லிட்டர்) விலை முன்பு ரூ.69 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.72 ஆக உயர்த்தப்படுகிறது.

Related Stories: