ஜெட் எரிபொருள் விலை அதிகரிப்பால் சர்வதேச விமான சேவைகள் குறைப்பு 6 வழித்தடங்களில் தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

புதுடெல்லி: அதிக ஜெட் எரிபொருள் விலை மற்றும் வான் வழி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் சில வெளிநாட்டு நகரங்களுக்கான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளது. உலக சந்தையில் ஜெட் எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது விமான நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. பாகிஸ்தான் வான்வெளி இந்திய விமானங்களுக்கு 2025 முதல் மூடப்பட்டிருப்பதால், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் நீண்ட தூரம்,மாற்று பாதைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் வியன்னா அல்லது ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களில் தொழில்நுட்ப நிறுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இது லாபத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்த பிரச்னையால் விமான சேவைகள் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க்,டெல்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர்,மும்பை-டாக்கா, டெல்லி-மாலே இடையேயான விமான சேவைகள் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.எனினும் மாதந்தோறும் பல்வேறு நாடுகளுக்கான 1200 சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: