லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியின் இளைய மகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதீக் யாதவ்வுக்கு(38) நேற்று அதிகாலை திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் உயிரிழப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முக்கிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், உடற்பயிற்சி மற்றும் உடல்நலம் பேணுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரதீக் தீவிர அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்தார். எனினும் அவரது மனைவி அபர்ணா பாஜவில் நிர்வாகியாக உள்ளார்.
