இதுதான் சுடச்சுட பிரசாரமோ?செல்லூர் ராஜூ செல்லுமிடமெல்லாம் ஹாட்பாக்ஸ் சப்ளை…!

அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது தொகுதிக்குள் அவ்வளவாக அவருக்கு ஆதரவு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தாலும் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஏதும் நடைபெறவில்லை. இதனால், இந்த முறை மதுரை மேற்கில் இருந்து கிளம்பி மதுரை தெற்கு, மதுரை வடக்கு என இரு தொகுதிகளை குறிவைத்துள்ளார். இதற்கேற்ப கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார் செல்லூர் ராஜூ.

ஒருவேளை கட்சி தலைமை நீங்கள் மதுரை மேற்கில் தான் நிற்க வேண்டுமென கூறினால், நிலைமை என்னாகுறது என்ற கணக்கில் தொகுதியை ரவுண்டு வருகிறார். மேலும், தொகுதியில் உள்ள பைபாஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில், மேடையை போட்டு மக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருகிறார். இதற்கு டோக்கன் சிஸ்டம் வேற உண்டாம்… தேதிவாரியாக பிரித்து இந்த பகுதியில் இத்தனை டோக்கன்கள் என வீடு, வீடாக வழங்கி வருகிறார்கள் இவரது ஆதரவாளர்கள். இது தெரியாமல், ‘செல்லூர் ராஜூ எல்லாருக்கும் ஹாட்பாக்ஸ் கொடுக்கிறாராமே…’ என முண்டியடித்துக் கொண்டு சம்பவ இடத்தில் ஆஜராகி விடுகிறார்கள் அப்பகுதி மக்கள். இதனால் பரபரப்படைந்த செல்லூராரின் கைத்தடிகள், ‘டோக்கன் உள்ளவங்க மட்டும் வாங்கம்மா… மத்தவங்களுக்கு கிடையாது… வராதீங்க…’ என மைக்கில் கதறுகிறார்களாம்… கடந்த சில நாட்களாக செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம், அவருக்கு முன்பாகவே ஹாட் பாக்ஸ் வண்டி கரெக்டா போய் நிற்கிறதாம்…!

Related Stories: