வழக்குகளில் இருந்து தப்பிக்க கட்சியை காட்டி கொடுத்துட்டு பதவி, சோத்துக்காக ஓடிட்டாங்க… செங்ஸை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் வளர்த்த கட்சி. இன்று எத்தனையோ பேர் (செங்கோட்டையன்), இந்த கட்சியை காட்டி கொடுத்து விட்டு, பதவிக்காகவும், சோற்றுக்காகவும் வழக்கில் இருந்து தப்பிக்க ஓடி விட்டு இன்று வீரவசனம் பேசுகிறார்கள். எவ்வளவு சோதனை வந்தது? இந்த பகுதியில் (திருமங்கலம் தொகுதி) அதிகாரத்திற்கு பயந்து பலர் ஓடியுள்ளனர். இந்த பகுதியில் தன்மானத்துடன் கட்சியை காப்பாற்றியதால்தான், நீங்கள் இருப்பதால்தான் இன்று டெல்லி தலைமை எடப்பாடி தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் போட்டியிடும் என முடிவு எடுத்துள்ளது.

எடப்பாடியின் உழைப்புக்கும், அரவணைப்புக்கும் தாய் உள்ளத்துக்கும், ஆண்மைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் வந்து பிரசாரத்தினையும் துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 தொகுதிகள் உள்ளன. ஆனால் அனைவரது கண்ணையும் உறுத்தக்கூடிய தொகுதி திருமங்கலம். அதற்கு காரணம் தொண்டர்களாகிய நீங்கள் அனைவரும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதுதான். இனி 50 ஆண்டு காலத்திற்கு தலைவனை தேடவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தான் நமக்கு வழிகாட்டி. இவ்வாறு பேசினார்.

* என்னது அன்புமணி ஆட்சியா…? கூட்டணிக்கு மனைவி வேட்டு
சேலம் மாநகரில் சிங்கப்பெண்ணே எழுந்து வா என மகளிருக்கான கூட்டத்தை பாமக நடத்தியது. அதில், சவுமியா அன்புமணி பங்கேற்று பேசுகையில், ‘‘அன்புமணி ஆட்சிக்கு வந்ததும், சாராய கடைகளை முழுமையாக பூட்டிவிடுவார். ஒரே நாளில் போதையை ஒழித்து கட்டி விடுவார். அவருக்கு தாய்மார்களான நீங்கள் எல்லாம், பக்கபலமாக இருக்கணும். உங்களுக்கும், உள்ளாட்சி தேர்தலில் பதவியை தருவார்,’’ என்று அளந்துவிட்டார். கூட்டத்தில் இருந்த பெண்கள், இப்போது அண்ணன் அன்புமணி, அதிமுகவோட கூட்டணி வைச்சிருக்காரு. அப்படி இருக்கும்போது, அன்புமணி எப்படி ஆட்சிக்கு வருவாரு. டாஸ்மாக் கடைகளை மூட அதிமுக சம்மதிக்காது. இருந்தும் அண்ணி ஏன் இப்படி பேசுகிறார். ஒருவேளை, ‘‘முதல்நாள், முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு,’’ என்ற மைண்ட் வாய்ஸ் கண்முன் வந்து போயிருக்குமோ, என்று பேசிக்கிட்டாங்க.

Related Stories: