சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும்: தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

தென்காசி: செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று தென்காசி நாடாளுமன்றம் உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் நேரில் சந்தித்து தென்காசி தொகுதிக்கான ரயில்வே தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும். கோயம்பத்தூர் முதல் மதுரை வரை இயக்கப்படும் மதுரை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும். கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பாம்புகோயில் சந்தையில் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

சென்னை – செங்கோட்டை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தை, பழைய அட்டவணைப்படி இயக்க வேண்டும் என்றும் தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: