தமிழ்நாடு சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலாளர் சாந்தி சிறப்பு செயலாளரானார்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த சாந்தி சிறப்பு செயலாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில், கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து 2026-27ம் நிதியாண்டிற்கான பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்த சாந்தியை சிறப்பு செயலாளராக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சாந்திக்கு சிறப்பு செயலாளர் பதவியை வகிக்க தேவையான அனைத்து தகுதிகளும் பெற்றவர் என அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வை தொடர்ந்து, சிறப்பு செயலாளராக சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: