தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 

சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தமிழகம் முழுக்க நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னை வருவாய் மண்டலத்துக்கான போராட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர் நகர், கே.கே.சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இந்த காலத்தில் தமிழக மக்கள் அதிக துன்பங்களுக்கு ஆளாகினர். மக்களுக்கு விடிவு பிறக்கும் காலம் வந்துவிட்டது. போதைப் பொருள், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை ஜரூராக நடக்கிறது. போதை ஆசாமிகளை பிடிக்கச் செல்லும் காவலர்களை குற்றவாளிகள் தாக்குகின்றனர், காவலர்களுக்கே பாதுகாப்பில்லை.

தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: