சென்னை: கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ஜனநாயகன் படம், தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனால், ‘ஜனநாயகன்’ படத்தை தணிக்கை குழுவினர் மீண்டும் பார்த்துவிட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 9ம் தேதி சென்னையில் மறுதணிக்கை நடப்பதாக இருந்தது. உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாக மறுதணிக்கை ரத்து செய்யப்பட்டது. நேற்று மறுதணிக்கை நடப்பதாக இருந்தது. ஆனால், நேற்றும் தணிக்கை குழுவினரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும், இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு மறுதணிக்கை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
