வாலாஜா அருகே நள்ளிரவில் அம்மன் கோயில் பூட்டு உடைத்து நகை திருட்டு

*மர்ம நபர்கள் கைவரிசை

வாலாஜா : வாலாஜா அருகே நள்ளிரவு அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜா அடுத்த அணைக்கட்டு ரோடு பெரியார் நகர் பகுதியில் நாகாத்தம்மன் கோயில் உள்ளது.

இங்கு அதே பகுதியை சேர்ந்த பூசாரி பழனி என்பவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்து கொண்டு நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். வழக்கபோல் நேற்று காலை மீண்டும், கோயிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாலாஜா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கருவறையில் உள்ள நாகாத்தம்மன் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: